national
வாயைவிட்டு மாட்டிகிட்டியே… என் பையில என்ன வெடிகுண்டா இருக்கு…? ஏர்போர்ட்டில் வைத்து கைது…!
என் பையில் என்ன வெடிகுண்டா இருக்கு என்று கேட்டவர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை சோதனை செய்து அவர்களை தொடர்ந்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ஏற விமான நிலையத்திற்கு வந்த மனோஜ் குமார் என்ற 42 வயதானவரின் பையை அதிகாரிகள் சோதித்தனர். எந்த பிரச்சினையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு எடுத்த பிறகு எனது பையில் வெடிகுண்டு இருக்கின்றதா? என்று மனோஜ் அதிகாரியை பார்த்து கேட்டிருக்கின்றார்.
அவர் ஏதோ ஜோக் அடிப்பது போல் இதை கேட்டிருந்தாலும் அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டு என்று கூறியவுடன் பதறி அவரை கைது செய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்த அவரை உள்ளூர் போலீசாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ஜோக் அடிப்பதாக கூறி இப்படி அவர் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.