Latest News
மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து விடிய விடிய… அரங்கேறிய கொடூர சம்பவம்…!
மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து விடிய விடிய பலாத்காரம் செய்த கொடுமை சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம் வெங்கடாப்பூர் பகுதியை சேர்ந்த நபர் சிவகுமார். இவர் கிராமத்தில் மைனர் போல சுற்றி திரிபவர். அங்கு இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை தான் வழக்கமாக வைத்து வந்திருக்கின்றார். நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கின்றார் .
அப்போது அங்கு வந்த சிவகுமார் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார் என்பதை அவர் தெரிந்து கொண்டார். பின்னர் திடீரென்று மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று கதவின் அறையை பூட்டிவிட்டார். மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் வைத்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார்.
காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்கள். போலீஸ் நிலையம் முன்பு அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள 6 பெண்களை ஏற்கனவே சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். மூதாட்டி என கூட பார்க்காமல் அவரையும் வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார் எனவே அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.