தங்கப்பதக்கம், 750 கிலோ லட்டு… வினேஷ் போகத் வருகையை கொண்டாடி தீர்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!

தங்கப்பதக்கம், 750 கிலோ லட்டு… வினேஷ் போகத் வருகையை கொண்டாடி தீர்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!

பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவருக்கு அங்கு உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அரியான மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி கிராமத்துக்கு வருகை தந்தார் வினேஷ் போகத். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடினார்கள். மாலை மரியாதை செய்து பரிசு பொருள்கள் என வழங்கி வினேஷ் போகத்தை கொண்டாடி வரவேற்றனர்.

மேலும் இவரின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகள் தயாராக இருந்தது. வினேஷ் போகத்தை கௌரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைந்து அவருக்கு தங்கப்பதக்கத்தை வழங்கியிருந்தார்கள். ஊர் மக்கள் ஒன்றாக இணைந்து காசு போட்டு இவருக்கு இந்த தங்கப் பதக்கத்தை வழங்கியிருக்கிறார்கள்.

தனது உறவினரும் குருவமான மகாவீர் சிங்கிடம் ஆசி பெற்று கண்ணீர் விட்டு அழுதார் வினேஷ். ஊர் மக்களின் அன்பு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுதத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை. இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கின்றது. இது என்னை சரியான திசையில் பயணிக்க வழிகாட்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.