Connect with us

பைக்கின் பின்பக்கம் மனைவியின் கை,கால்களை கட்டி… கணவன் செய்த கொடூர சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

national

பைக்கின் பின்பக்கம் மனைவியின் கை,கால்களை கட்டி… கணவன் செய்த கொடூர சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கணவர் தனது பைக்கின் பின்பக்கத்தில் மனைவியின் கை, கால்களை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மேலும் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகின்றது.

இது குறித்து யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை .தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பெண்ணின் கணவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றார்கள். தனது சகோதரியை பார்க்க வேண்டும் என்று மனைவி ஆசைப்பட்ட காரணத்தினால் அவரை இப்படி பழிவாங்கி இருக்கின்றார் அவரது கணவர்.

தனது சகோதரியை பார்க்க வேண்டும் என்று மனைவி கணவரிடம் கூறி இருக்கின்றார். அது கணவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கணவர் மறுத்ததால் தொடர்ந்து சகோதரியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கின்றார்.

இதனால் கோபமான கணவர் மனைவியை தாக்கி அவரின் கை, கால்களை கட்டி தரதரவென இழுத்து வந்து தனது மோட்டார் சைக்கிளில் பின்பக்கத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு மனைவியை அடிக்கடி அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.

More in national

To Top