Connect with us

என்ன கொடுமை… மகளின் ஒரு கைக்கு இறுதிசடங்கு செய்த தந்தை… கண்கலங்க வைத்த சம்பவம்…!

national

என்ன கொடுமை… மகளின் ஒரு கைக்கு இறுதிசடங்கு செய்த தந்தை… கண்கலங்க வைத்த சம்பவம்…!

வயநாட்டில் தனது மகளின் ஒரு கைக்கு தந்தை ஒருவர் இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி 880க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200 பேர் காணவில்லை என்று கூறப்படுகின்றது. தொடர்ந்து ஏழாவது நாளாக ராணுவம் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரேடார் கருவி, செல்போன் ஜிபிஎஸ் போன்றவற்றை பயன்படுத்தி தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தகனம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வயநாட்டை சேர்ந்தவர் ராமசாமி, இவர் கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் மாட்டிக்கொண்டார். மேலும் அவரது மகள் மாயமானார். பல கட்ட தேடுதலுக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது.

அவரது விரலில் திருமணம் மோதிரமும் அவரது கணவர் பெயரும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்துதான் தன் மகள் ஜிசாவின் கை என்பதை ராமசாமி உறுதி செய்தார். தன் மகளின் ஒரு கைக்கு அவர் இறுதிச் சடங்கு செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனது மகளின் கையிக்கு வெள்ளை துணையால் சுற்றப்பட்டு தகனம் செய்யும் இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது தந்தை கதறி அழுததை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு அந்த நாட்டையே உலுக்கி வருகின்றது.

More in national

To Top