Connect with us

எலான் மஸ்கிடம் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம்… டெஸ்லா துணைத் தலைவர் திடீர் ராஜினாமா…!

national

எலான் மஸ்கிடம் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம்… டெஸ்லா துணைத் தலைவர் திடீர் ராஜினாமா…!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சிஇஓவாக இருக்கின்றார். எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் டெஸ்லா நிறுவனம் தான் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கின்றது. டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இந்தியாவை சேர்ந்த சீலா வெங்கடரத்னம் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வேலையை செய்து வருகின்றார். இவரது வருகைக்குப் பின்பு இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தியின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று ஷீலா வெங்கட்ரத்னம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

அதில் அவர் “டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை முதலில் பெருமையாக கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்திற்கு நல்லதல்ல, மயக்கம் வரும் அளவுக்கு பிரஷர் ஏற்படுகின்றது” என்று கூறி இருக்கின்றார். சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர்ப்பதவியில் இருப்பவர்கள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

More in national

To Top