national
பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானா வாலிபர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
பாலைவனத்தில் சிக்கி தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் சபாஷ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹசா பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தொலைநுட்ப வல்லுனராக மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றார்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சபாஷ்கான் சக ஊழியர்களுடன் வழக்கமாக வேலைக்காக காரில் சென்றார். சவுதி அரேபியாவில் பறந்து விரிந்த மோசமான ரூபா பாலைவனத்திற்கு சென்றார். பாலைவனத்தின் மையப்பகுதியில் சென்றபோது அவரின் காரில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி செயல் இழந்தது.
அவர்களிடம் இருந்து செல்போனில் சிக்னல் கிடைக்காமல் எந்த வழியாக வெளியே செல்வது என்று தெரியாமல் சிக்கி தவித்து வந்தனர். கடுமையான மணல் மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தார்கள். அவர்களிடம் இருந்த உணவு மற்றும் குடிநீர் காலியாகியது. காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்தது.
நீறின்றி சோர்வு காரணமாக பாலைவனத்திலேயே மயங்கி விழுந்த இருவரும் அங்கேயே உயிரிழந்தார்கள். வெளியே சென்ற ஊழியர்கள் ஐந்து நாட்களாக மீண்டும் பணிக்கு வராததால் காணாமல் போனதாக நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை எடுத்து போலீசார் நீண்ட தேடுதலுக்கு பிறகு சபாஷ்கான் மற்றும் அவருடன் சென்ற ஊழியரை பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.