national
கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்… கோபத்தின் உச்சத்தில் சுத்தியலால் கொடூர சம்பவம்…!
கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்டதால் பெண் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தெலுங்கானா, கங்கா ரெட்டி மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் காவல் எல்லைக்குட்பட்ட சிவகங்கை காலனியை சேர்ந்த நபர் சரோஜினி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசம்மா என்பவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயை கடனாகப் வாங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நரசிம்மா கொடுத்த கடனை திருப்பி கேட்டிருக்கின்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது. இதில் ஆத்திரம் அடைந்த சரோஜினி நரசமாவை முகத்திலேயே சுத்தியலால் பயங்கரமாக தாக்கி இருக்கின்றார்.
இதில் பலத்த காயம் அடைந்த நரசம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பெய்த பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரோஜினியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.