Latest News
தெலுங்கானா வெள்ள பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சிம்பு… எவ்வளவு தெரியுமா…?
தெலுங்கானா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிம்பு 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்கின்றார்.
ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதனை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆந்திரா மாநிலத்தில் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், குறிப்பாக விஜயவாடா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது நிதியை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னாடி நடிகர்களாக இருக்கும் பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவி, பாலையா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு ரூபாய் 6 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றார்.
தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்கு நிதி கொடுத்து உதவிய சம்பவம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகின்றது. நடிகர் சிம்பு தற்போது எஸ்டிஆர் 48 என்ற திரைப்படத்திலும் மணிரத்தினம் இயக்கும் தக்லைப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.