Latest News
ஐதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!
ஹைதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள் சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணிக்கு அமர்த்தப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு என்று தனித்தனி சீருடை தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியிருக்கின்றது . தெலுங்கானாவில் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலை வாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவில் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சி ஏற்பு மற்றும் சமூக நலத்திட்டத்தை அறிவித்திருக்கின்றது.
இந்த திட்டம் மூலம் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன் அவர்கள் ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ சிறப்பு பயிற்சி பெறுவார்கள்.
மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரி தெரிவிக்கையில் ‘திருநங்கைகள் பணியமத்தப்படுவதால் மென்மையான சாலை நிர்வாகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. மேலும் அவன்/அவள் என்ற தனி நபர்களுக்கு தனித்தனியான வடிவமைப்புகளுடன் திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது.
கூடுதலாகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலை வாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் திருநங்கைகள் நல்ல பயனை பெறுவார்கள்’ என்று கூறப்படுகிறது.