Latest News
காதலியை மடியில் அமர வைத்து பைக் ஓட்டிச்சென்ற வாலிபர்… வைரல் வீடியோ…!
ஹைதராபாத்தில் காதலியை மடியில் அமர வைத்து வாலிபர் ஒருவர் பைக் ஓட்டி சென்ற வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய இளைஞர்கள் பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் அட்டூழியம் செய்து வருகிறார்கள். தற்போதயெல்லாம் பீச், பார்க் என்று செல்வதற்கே முடிவதில்லை எங்கு பார்த்தாலும் ஜோடி ஜோடியாக அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்து வருகிறார்கள். கேட்டால் இது எங்கள் சுதந்திரம் என்று கூறி வருகிறார்.
ஹைதராபாத் பழைய நகரமான பஹாடி ஷரீஃப் இடத்தில் பரபரப்பான சாலையில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்கள். இதில் வாலிபர் வினோதமான முறையில் தனது காதலியை மடியில் அமர வைத்து பைக் ஓட்டி சென்று இருக்கின்றார். அந்த இளம் பெண் வாலிபரை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருக்கின்றார்.
பைக்கில் சென்று கொண்டிருந்தபோதே காதல் லீலைகளில் இவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதை கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சில வாகன ஓட்டிகள் அவர்கள் பின்னால் பைக்கில் சென்று காதல் ஜோடியை வீடியோவாக எடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் மிக வேகமாக பரவியது.
இது போன்ற காதல் ஜோடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து ஹைதராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து சாலையில் பைக்கில் காதலியை மடியில் அமர வைத்து அழைத்துச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். ஹைதராபாத் மாநகர பகுதிகளில் பரபரப்பான சாலைகளில் காதல் அத்துமீறல் அதிகரித்து வருகின்றது. இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது.