national
பாலியல் தொல்லை கொடுத்த நபர்… தோசை கரண்டியால் வாலிபருக்கு இளம்பெண் கொடுத்த தண்டனை…
பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை ஒரு பெண் தோசை கரண்டியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த பிவண்டி என்ற பகுதியில் 26 வயதான இளம் பெண் வசித்து வருகின்றார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அணில் சத்யநாராயணன். சம்பவ தினத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கின்றார். அப்போது வாலிபர் மதுபோதையில் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்து இருக்கின்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வாலிபரிடம் இருந்து தப்பிப்பதற்காக சமையலறைக்கு ஓடி இருக்கிறார். அங்கும் துரத்தி வந்த அந்த வாலிபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு இருக்கின்றார். அப்போது அந்த பெண் வாலிபரின் அந்தரங்க உறுப்பை சமையலறையில் இருந்த தோசை கரண்டியால் தாக்கி இருக்கின்றார்.
இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்த அந்த வாலிபர் ஓட்டம் பிடித்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.