Latest News
குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
கேரளாவில் குரங்கம்மை அறிகுறி உடன் மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
திருவனந்தபுரம், மலப்புறம் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது கேரள மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் குரங்கு அம்மை அறிகுறியுடன் வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று முன்தினம் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய அந்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த அம்மை நோய் போன்று கையில் தழும்புகள் இருப்பதால் அவர் சிகிச்சை பெற மஞ்சரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். அப்போது அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் அவரின் உடலில் இருந்து திரவ மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு குரங்கு நோய் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஏராளமான ஒரு உயிரிழந்து வரும் நிலையில் தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் காண அறிகுறி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.