national
குட்டியா ஒரு ரெஸ்ட்… பள்ளியில் பாய் விரித்து படுத்த ஆசிரியை… வைரலான வீடியோவால் அதிரடி முடிவு…!
பள்ளி ஆசிரியை பள்ளி நேரத்தில் பாய் விரித்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் மாணவிகள் அவருக்கு விசிறியால் வீசிவிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரகாண்ட் மாநிலம், அலிகார் மாவட்டம் தானிப்பூர் என்ற பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் டிம்பிள் என்பவர் பணியாற்றி வருகின்றார். அவர் பள்ளியில் வகுப்பறை நேரத்தில் பாடம் நடத்தாமல் பாய் விரித்து படுத்து தூங்கி இருக்கின்றார். அவரை சுற்றி மூன்று மாணவிகள் விசிறியால் வீசிவிடும் வீடியோவானது இணையத்தில் வெளியானது.
அத்துடன் அந்த ஆசிரியருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியை டெம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் ராகேஷ் குமார் சிங் தெரிவித்து இருக்கின்றார்.