Connect with us

கொல்கத்தா ஏர் போட்டில் ஒரு டீயோட விலை இவ்வளவா…? பா சிதம்பரம் கேள்வி…!

Latest News

கொல்கத்தா ஏர் போட்டில் ஒரு டீயோட விலை இவ்வளவா…? பா சிதம்பரம் கேள்வி…!

கொல்கத்தா ஏர்போர்ட்டில் ஒரு டீயின் விலை 340 ரூபாயா என்று பா சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் பா சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பதிவானது பேசு பொருளாக மாறி இருக்கின்றது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்ததாவது “கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf என்ற உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் வாங்கினேன்.

அதன் விலை 340 ரூபாய் என்று கூறினார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் ஒரு தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்கு வங்கத்தில் பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது என்று பதிவிட்டு இருக்கின்றார்.

பா சிதம்பரத்தின் பதிவிற்கு கொல்கத்தா விமான நிலையம் பதில் கூறியிருக்கின்றது அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது ‘நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கின்றோம். இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி’ என தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான பதிவு தற்போது இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

More in Latest News

To Top