கிலோ சுத்தமான நெய் 320 ரூபாய்க்கா..? வாய்ப்பே கிடையாது… தெலுங்கு தேசம் அதிரடி அறிவிப்பு…!

கிலோ சுத்தமான நெய் 320 ரூபாய்க்கா..? வாய்ப்பே கிடையாது… தெலுங்கு தேசம் அதிரடி அறிவிப்பு…!

ஒரு கிலோ சுத்தமான நெய் 320 ரூபாய்க்கு வாங்குவதற்கு முடியாது என்று தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்திருக்கிறார்கள்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் வழங்கிய நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டில் ஏ ஆர் டைரி ஃபுட் பிரைவேட் லிமிட் நிறுவனம். இது பற்றிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து இருந்தது.

தமிழகத்தில் இருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஒன்று. முதலில் NDDB ஆய்வகச் சோதனை அறிக்கையில் நெய் மாதிரி ஏ ஆர் டைரி நிறுவனத்தில் இருந்து வந்தது என்று கூறவில்லை. இதில் தவறான முடிவுகள் வரவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதங்களில் நாங்கள் வழங்கிய நெய் டேக்கர்களை சோதனை செய்யப்பட்ட அறிக்கைகள் திருப்திப்படுத்திய பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்றுக்கொண்டது. தேவஸ்தானம் தொடர்ந்து விற்பனையாளர்களை மாற்றியதால் ஜூலைக்கு பிறகு நாங்கள் நெய்விநியோகம் செய்வதையே நிறுத்தி விட்டோம்.

மாட்டுத் தீவனம் உட்பட பொருளால் நெய்யில் வெளிநாட்டு கொழுப்பின் தடயங்கள் காணப்படுவதற்கு பல காரணம் இருக்கின்றது. ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு துறை தலைவர் கூறியிருந்தார். இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் வெங்கட்ரமண செய்தியில் கூறியிருந்ததாவது முந்தைய ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு நெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒரு கிலோ 320 ரூபாய்க்கு வழங்குவதாக கூறி நிறுவனத்திடம் இருந்து நெய்யை வாங்கி இருக்கின்றது.

நல்ல தூய தரமான நெய்யின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு 900 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் 320 ரூபாய்க்கு வாங்கப்பட்ட நெய் கட்டாயம் தரக்குறைவாக தான் இருக்கும். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் குறைந்த விலையில் நெய்யை ஏலத்தை எடுத்து பயன்படுத்தி இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.