national
முறுக்கு ஆர்டர் செய்த வாடிக்கையாளர்… எக்ஸ்பீரியனதை டெலிவரி செய்த ஸ்விக்கி… அதிர்ச்சி சம்பவம்…!
சென்னையில் ஒரு மாதத்திற்கு முன்பு எக்ஸ்பீரியான முறுக்கு பாக்கெட் வாடிக்கையாளருக்கு swiggy instamart-ல் டெலிவரி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உணவு டெலிவரி நிறுவனமான swiggy மளிகை பொருட்களை இன்ஸ்டா மார்க் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து வருகின்றது.
இதன் மூலம் பலரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இதில் ஆர்டர் செய்து பயன்பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பயணர் ஒருவர் நேற்று இன்ஸ்டா மார்ட்டில் 360 ரூபாய்க்கு நொறுக்கு தீனிகள் ஆர்டர் செய்திருக்கின்றார். அன்றைய தினம் அவர் ஆர்டர் செய்த பொருள்கள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.
அதில் அவர் ஆர்டர் செய்த முறுக்கு பாக்கெட் ஒன்று ஏற்கனவே எக்ஸ்பீரியானதை கண்டு அதிர்ச்சடைந்தார். 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தயாரிக்கப்பட்ட இந்த முறுக்கு பாக்கெட் 45 நாட்கள் வரை மற்றும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் ஜூலை 20ஆம் தேதியே இந்த முறுக்கு பாக்கெட் எக்ஸ்பீரியாகி இருக்கின்றது. இது குறித்து வாடிக்கையாளர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றார்.