national
செந்தில் பாலாஜி ஜாமின் மனு… மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்…!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் அவை எஸ் ஓஹா மற்றும் ஏ.ஜி மாசி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி மீதான மூன்று வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை சரியாக விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கோரிய மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி பட்டியலிட்டு உத்தரவிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.