Latest News
பெண் டாக்டர் கொலை வழக்கு… புதிய அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்… சிபிஐக்கு உத்தரவு…!
பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நீதி வேண்டும் என்று கூறி மருத்துவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது மேற்குவங்க சுகாதாரத் துறை சார்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பெண் மருத்துவர் கண்டித்து மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
மேலும் சிஐஎஸ்எப் தேவையான அனைத்தையும் இன்றைக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷாரா மேத்தா தடவியல் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார். அதை 17-ம் தேதி புதிய அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கின்றது. அதன்படி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான புதிய அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.