மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. இதை சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை மற்றும் சிபிஐ சார்பாக தனித்தனி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்த போது உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக கேட்டறியும் என்று அவர் உறுதியளித்தார். நீங்கள் 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடலளவிலும், மனரீதியிடம் நீங்கள் தயாராக இருப்பதில்லை.
நான் மிக முக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை. பொதுவாக வேலை நிலைகளை பற்றியும் நாங்கள் குறிப்பிடுகின்றோம். நான் பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அங்கு குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்தபோது நான் அரசு மருத்துவமனையில் தரையில் படுத்து உறங்கி இருக்கின்றேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று பேசி இருந்தார்.