national
அடுத்த வருடம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம் பூமி திரும்ப வாய்ப்பு… நாசா வெளியிட்ட தகவல்…!
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஆகும் என்று நாசா தெரிவித்து இருக்கின்றது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்-க்கு 58 வயதாகிறது. இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுகசிவு மற்றும் புதுவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவாகி இருக்கின்றது.
இதனால் விஞ்ஞானிகள் அனைவரும் கவலை அடைந்து இருக்கிறார்கள். இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியின் சிக்கி இருக்கின்றார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நிறுவனம் நாடி இருக்கின்றது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர முடிவு செய்து இருக்கிறார்கள். 4 வீரர் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பவும் ஸ்டார் லைனில் ஏற்பட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யாமல் சுனிதா வில்லியம்ஸ் நாடு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருவதால் இதுதான் ஒரே வழி என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் எட்டு மாதம் கழித்து தான் பூமிக்கு திரும்புவார்கள் எனவும், அதற்கான பாதுகாப்பான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்து வைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாசா தெரிவித்து இருக்கின்றது.