Connect with us

நீதிபதி திட்டியதால் ரயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர்… வைரல் வீடியோ…!

Latest News

நீதிபதி திட்டியதால் ரயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர்… வைரல் வீடியோ…!

நீதிபதி திட்டிய காரணத்தால் ரயில்வே டிராக்கில் அமர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உத்தர பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல்துறை ஆணையர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கின்றார். இது தொடர்பான வெளியான வீடியோவில் உ.பி அலங்கார் பகுதியில் காவல் ஆணையர் ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் வீடியோவும் அவர்களை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகி இருக்கின்றது.

நீதிபதி அபிஷேக் திரிபதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு வரவழைத்து திட்டியதாகவும் மிரட்டியதாகவும் கூறிய அவர் அழுது கொண்டே பேசுவது வீடியோவில் பதிவாகி இருந்தது.

அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் எனவும், சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவரை ஐந்து பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளை கைது செய்தாய் என்று நீதிபதி திட்டியதாக கூறியிருந்தார். இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தது தெரிய வந்திருக்கின்றது.

More in Latest News

To Top