national
இந்திரா காந்தியை போல் மம்தாவுக்கும் நடக்கணும்… மிரட்டல் விடுத்த மாணவன்… அதிரடி நடவடிக்கை…!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் இரவில் பணியாற்றி வந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஒன்பதாம் தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது பிரேத பரிசோதனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தன்னார்வ பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தை இது குறித்து கூறுகையில் எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு 11-வது நாள வங்க மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சர்மா என்ற பிகாம் படிக்கும் இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் இந்திராகாந்தியை சுட்டுக்கொலை செய்தது போல முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதையடுத்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.