national
காதலிக்கு ஐபோன் பரிசு… தாயின் நகையைத் திருடி… 9-வது வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி செயல்..!
காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசு வழங்க வேண்டும் என்பதற்காக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது தாயின் நகையைத் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டெல்லியில் நஜாப் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தங்க நகைகள் காணாமல் போனதாக சிறுவனின் தாயார் புகார் அளித்திருந்தார். நகை திருட்டு தொடர்பாக ஆகஸ்ட் மூன்றாம் தேதி சிறுவனின் தாயார் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்கள். அதில் தனது வீட்டிலிருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க கம்மல் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.
போலீசார் இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டுக்குள் யாரும் வராதது, வெளியே செல்லாதது போன்றவை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. வீட்டிற்குள் இருக்கும் யாரோ ஒருவர்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதில் அந்த பெண்ணின் மைனர் மகன் குற்றம் நடந்ததிலிருந்து காணாமல் போனதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதையடுத்து சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவன் 50,000 ரூபாய்க்கு புதிய ஐபோன் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. வீட்டுக்கு திரும்பிய சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவனிடமிருந்து ஆப்பிள் போனை மீட்டனர். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த சிறுவனின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்ட காரணத்தால் படிப்பில் ஆர்வமில்லாமல் சராசரி மதிப்பெண்களை எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. பள்ளியில் சிறுவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியுடனும் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவரின் நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றார். தனது காதலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு சிறந்த பரிசை கொடுக்க விரும்பிய சிறுவன் தனது தாயிடம் பணம் கேட்டு இருக்கின்றார்.
குடும்ப வறுமை காரணமாக பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றார் சிறுவனின் தாய். மேலும் முதலில் படிப்பில் கவனம் செலுத்தும் படியும் அறிவுறுத்தி இருக்கின்றார். தாய் பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த நகைகளை திருடி உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். காணாமல் போன ஒரு ஜோடி கம்மல், ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு செயின் மீட்கப்பட்டது. நகையை வாங்கியவர்களில் ஒருவரான கமல் வர்மா என்பவரையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.