national
இந்தியா சிமெண்டை விட்டு வெளியேறிய ஸ்ரீனிவாசன்.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. அப்ப சிஎஸ்கே நிலைமை..?
தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சிஇஓ நாராயணசாமி ஸ்ரீனிவாசன். இவர் தனது நிறுவனத்தின் 32.7 சதவீத பங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒரு பங்கு 390 என்ற விலை கொடுத்து, மொத்தமாக 3,954 கோடிக்கு வாங்கி இருக்கின்றது.
விற்கப்பட்ட பங்குகளில் ஸ்ரீனிவாசனின் பங்கு மட்டுமே 2,656 கோடி மதிப்பு ஏற்கனவே இந்தியா சிமெண்ட் 22% பங்குகளை நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சிஇஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீனிவாசன் நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் உணர்ச்சி பொங்க பேசியிருந்தார். மேலும் ஊழியர்கள் மத்தியில் பேசியவர் நிர்வாகம் வேறு கைக்கு மாறுவதால் ஊழியர்கள் யாரும் தயங்க தேவையில்லை.
இப்போது நம் நிறுவனத்தில் இருக்கும் பாலிசிகளும் நடைமுறைகளும் எந்த விதத்திலும் மாறுபடாது என்று அல்ட்ராடெக் நிறுவனத்திடம் இருந்து உறுதி பெற்று இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்தியா சிமெண்ட் நிறுவனமானது கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யனார் மற்றும் டி எஸ் நாராயணசாமி ஆகியோரால் தொடங்கப்பட்டது.
நாராயண சுவாமியின் மறைவுக்குப் பிறகு தனது 23 வயதிலிருந்து ஸ்ரீனிவாசன் இந்திய சிமெண்ட் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்தி இருக்கின்றார். ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன் தான். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் பி சி சி ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தவர். இந்நிலையில் சீனிவாசன் இந்திய சிமிட்டை விட்டு வெளியேறின நிலையில் சிஎஸ்கே நிர்வகிக்க போகும் நிறுவனம் எது என கேள்வி எழும்பி இருக்கிறது.