இந்தியாவில் இன்னும் சமூகத் தொற்று நிலை வரவில்லை – கொரோனா குறித்து திட்டவட்டம்!

இந்தியாவில் இன்னும் சமூகத் தொற்று நிலை வரவில்லை – கொரோனா குறித்து திட்டவட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் கட்டமான சமூகத் தொற்று நிலையை இன்னும் அடையவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் மூன்றாம் மற்றும் அபாயகரமான மூன்றாம் நிலையை இன்னும் எட்டவில்லை என்று   மத்திய  சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து  “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதுவரை எந்த சமூக பரவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது” என தெரிவித்தார்.

சமூகத்தொற்று என்றால் வெளிநாடு சென்று வந்தவர் மற்றும் அவருடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்படும் நிலை ஆகும். வைரஸ் பரவலில் இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.