Connect with us

எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜாலியாக தொங்கிக் கொண்டிருந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்…!

Latest News

எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜாலியாக தொங்கிக் கொண்டிருந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்…!

எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு ஒன்று நுழைந்ததால் பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜபல்பூர் மற்றும் மும்பை கரிப்ரத் ரயில் நேற்று காலை கசாரா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் உள்ள ஜி17 பெட்டியின் சைடு பெர்த்தில் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போனனர். இதனால் ரயிலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் மிக வைரலானது. எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கசாரா வழித்தடத்தில் இருக்கும் அதிகாரியிடம் இது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ரயில் பாம்பு புகுந்த நிலையில் அங்கு இருக்கும் பயணிகள் அனைவரும் சிறிது நேரத்திற்கு அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர். சமீபத்தில் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்தது பயணிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சம்பவமாக ரயிலில் பாம்பு புகுந்தது அரங்கேறி இருக்கின்றது.

More in Latest News

To Top