national
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 2 இந்திய வீரர்கள்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு…!
இந்திய விண்வெளி ஆய்வு மையம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்காக இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கிறார்கள்.
அந்த மிஷன் திட்டத்தின் படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்கு இந்த ஒப்புதல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த திட்டத்திற்காக இந்தியாவின் தேசிய திட்ட நிர்ணய வாரியம் இரண்டு விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்தது. அதாவது விண்வெளி வீரர்கள் குழு கேப்டன் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அவர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. இதில் கிடைக்கும் அனுபவம் இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்கு பயனுள்ளதாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விண்வெளி வீரர்கள் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் இந்தியாவின் சுகன்யா திட்டத்திற்கு விண்வெளிக்கு செல்லும் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.