national
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை முந்திய ஷர்த்தா கபூர்… காரணம் என்ன தெரியுமா..?
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு நடிகை ஷர்தா கபூர் முன்னுக்கு சென்று இருக்கின்றார். சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஊடகம் இன்ஸ்டாகிராம். இந்த இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை விட அதிக ஃபாலோயிஸ்கள் பெற்று பிரபல பாலிவுட் நடிகை ஷர்த்தா கபூர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி 97.1 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் முதல் இடத்திலும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 91.8 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இந்தியாவில் இவர்களுக்கு அடுத்தபடியாக 91.3 பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஷர்த்தா கபூர் 91.4 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் தற்போது மூன்றாம் இடத்தை பிடித்திருக்கின்றார். இதனால் பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷர்த்தா கபூர் நடித்த ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் ஒரே வாரத்தில் படத்தின் வசூல் 300 கோடியை தாண்டியது.
இதன் மூலம் அதிகம் பேச வட்டு வரும் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்களுடன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. மேலும் 85.1 கோடி ஃபாலோயர்களுடன் ஆலியா பட், 80.4 கோடி ஃபாலோயர்களுடன் கத்ரினா கைஃப் மற்றும் 79.8 கோடி ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோன் அடுத்தடுத்து இடங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.