Connect with us

பெண் சம்மதித்தாலும்… இப்படி நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Latest News

பெண் சம்மதித்தாலும்… இப்படி நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பெண் சம்மதித்தாலும் ஏமாற்றியோ பயமுறுத்தியோ நடக்கும் பாலியல் உறவு என்பது பலாத்காரமே என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் சுமத்தப்பட்ட வழக்கில் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தொடர்ந்து பலமுறை பாலியல் உறவு வைத்துள்ளார் என்று குற்றப்பதிவில் இடம் பெற்றிருந்தது. அந்த நபர் மீது 376 சட்டப்பிரிவின் படி பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிக்கையை எதிர்த்து தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வக்கீல் பெண்ணின் அனுமதியுடன் தான் இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்றும், இது பலாத்காரத்தின் கீழ் வராது என்று அந்த வக்கீல் வாதாடினார்.

ஆனால் பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இருவருக்கும் இடையிலான உறவு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதின் மூலம் தொடர்ந்து வந்துள்ளது என்று வாதித்திட்டார். நீதிபதி இந்த உறவு பெண் தனது புகார் தெரிவித்துள்ளத படி ஏமாற்றியும் மிரட்டல் மூலமும் தான் நடந்துள்ளது.

பெண்ணின் அனுமதியுடனே இருவருக்கும் இடையில் பாலியல் உறவு இருந்தாலும் அது பெண்ணை பயமுறுத்தி தவறாக வழி நடத்தி இருக்கும் பட்சத்தில் பலாத்காரத்திற்கான சட்டப்பிரிவு 376 இன் படி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பலாத்காரம் என்ற முகாந்திரத்திலேயே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்து இருக்கின்றது.

More in Latest News

To Top