Connect with us

ரூ. 10, 20, 50 நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு… அடிப்படை உரிமையை கூட பறிப்பதா…? மாணிக்கம் தாகூர் கண்டனம்…!

Latest News

ரூ. 10, 20, 50 நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு… அடிப்படை உரிமையை கூட பறிப்பதா…? மாணிக்கம் தாகூர் கண்டனம்…!

இந்தியாவில் 10 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பது போல் இருப்பதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இந்தியாவில் 10 20 மற்றும் 50 உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஏழைகளுக்கு நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி இருக்கின்றார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்து இருந்தவதாவது ‘ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது குறைந்துள்ளது. சிறு குறு தொழில்கள், தினக்கூலி வேலை செய்து வருமானம் ஈடுபவர்களுக்கு இது கடுமையாக பாதிக்கப்படுகின்றது. அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசியமான ரூபாய் தாள்கள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறும் செயல்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த இந்த குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்து வருகின்றது. ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்புக்கான வழிவகை இல்லை. எனவே ரிசர்வ் வங்கிக்கு நேரடி அழுத்தம் கொடுத்து குறைந்த மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை அதிகப்படுத்த வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

More in Latest News

To Top