national
எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றபடாத சீகேட் ஹார்ட் டிஸ்க் எப்படி அமலாகத் துறைக்கு கிடைத்தது. இந்த எளிமையான கேள்விக்கு எளிமையான பதிலை அமலாகத்துறை கொடுக்க வேண்டும்.
சோதனையில் கைப்பற்றிய பென்டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இருந்ததா? எனவும் கைப்பற்றிய பென்டிரைவில் அப்படி எந்த கோபமும் இல்லை என்பது செந்தில் பாலாஜி தரப்பின் வாதமாக உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதுபோன்ற கேள்வி அமலாகத் துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 15 நிமிடங்களாக உரிய பதில் எதுவுமே இல்லையே என்று நீதிபதிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
சோதனையில் கைப்பற்றாத சீகேட் ஹார்ட் டிஸ்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து பெற்றதாக அமலாக்கத்துறை வாதம் செய்தது. கடந்த 2020 பிப்ரவரி இரண்டாம் தேதி சோதனை இட்டபோது இந்த விவகாரத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இடம் செந்தில் பாலாஜி எழுப்பவில்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனிடையே செந்தில் பாலாஜி ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் கழிப்பது என செந்தில் பாலாஜி தரப்படும் மூத்த வழக்கறிஞர் ரோத்தகி கேள்வி எழுப்பினர். எனில் நாளை உரிய பதிலுடன் வர அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.