செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்…!

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்…!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் அவை எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும் ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர். இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.