national
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்…!
தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி மீதான மூன்று வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற பின்பு பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி ஜாபின் மனு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்டு 20ஆம் தேதிக்கு முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும், தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வழக்கை தள்ளி வைத்தனர்.