Latest News
மாட்டுக்கறி சாப்பிடறவன் கீழ்ஜாதி… மாட்டு மூத்திரம் குடிப்பவன் மேல்ஜாதி… சீமான் சர்ச்சை பேச்சு…!
மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கீழ்ஜாதி என்று கூறுகிறார்கள். மாட்டு மூத்திரம் குடிக்கிறவர்கள் மட்டும் மேல் ஜாதியா என்று சீமான் கேள்வி அனுப்பி இருக்கின்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் மாட்டு இறைச்சி கொழுப்பு கலந்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது ‘திருப்பதியில் பிரச்சனையில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளோம்.
யார் அதை கலந்தது என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துவிட்டு வேறொரு நபரிடம் ஒப்பந்தம் கொடுத்து விட்டால் பிரச்சினை முடிந்து விட்டது. லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்டி இந்தியாவுக்கே பெரிய உருட்டு. மாட்டில் இருந்து வரும் பால், நெய் சாப்பிடும் நீ மாட்டில் இருந்து வரும் கொழுப்பை சாப்பிட்டால் செத்து விடுவாயா?
இவர்கள் ஒரு கோட்பாடு வைத்திருக்கிறார்கள். மாட்டு கறி சாப்பிடும் நான் கீழ் ஜாதி என்றும், மாட்டு பால் குடிக்கிறவன் இடைநிலை ஜாதி என்றும், மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் மேல் ஜாதி என்று வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் பாலும் நெய்யும் கொட்டப்படுகின்றது. மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா?
பெருமாளை நீங்கள் மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? சாதாரண லட்டுக்கு எல்லாம் பெருமாள் மாசுபடுவாரா? புனிதம் கெட்டுப் போகுமா? மதம் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு ஜாதி மதம் மற்றும் ஜாதியைப் பற்றிய சிந்திக்க நேரம் இருக்காது.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திருப்பதியில் லட்டுவில் கொழுப்பு கலந்து விட்டார்கள் என்று ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்ட, கிறிஸ்தவர் ஜெகன்மோகன் ஆட்சியில் தான் கொழுப்பு கடந்து விட்டார்கள் என்று அவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள் என பேசி இருக்கின்றார். தற்போது சீமான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.