Connect with us

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… 10,000 போலீசார்கள்… டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு…!

national

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… 10,000 போலீசார்கள்… டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு…!

இந்தியாவில் 48வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது.  டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த விழாவிற்கு பிரதமர் மோடி காலை 7.30 மணி அளவில் வந்து தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றுகின்றார். இது அவரது பதினோராவது சுதந்திர தின உரையாகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா வளர்ந்த பாரதம் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறையை சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்று இருந்தனர். மேலும் துணை ராணுவ படையினர் மற்றும் என்சிசி உள்ளிட்ட மாணவர் படையும் இதில் பங்கேற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்காக 35 நாட்டு போலீசார் 10,000 டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையன் வெளிப்புறப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

செங்கோட்டையை ஒட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். செங்கோட்டையை சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தவிர டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்றவற்றில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு இருக்கின்றது.

More in national

To Top