Connect with us

லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

national

லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

குஜராத் மாநிலத்தில் மதிய உணவு வேளையில் பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணா குருக்கள் பள்ளியில் முதல் தளத்தில் 7-ம் வகுப்பு மாணவர்கள் தினந்தோறும் பாடம் பயின்று வருகிறார்கள். நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் உணவு வேலையின் போது மாணவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஒரு புறசுவர் இடிந்து விழுந்தது.

வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவருக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்.

வகுப்பறையின் சுவறானது கீழ்தளத்திலிருந்து மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தின் மீது விழுந்தது. வகுப்பின் சுவர் கீழே இடிந்து விழுந்த போது சுவரோடு சேர்ந்து மாணவர்களும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போர்களை பதற வைத்தது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More in national

To Top