national
ஒரு மழைக்கு கூட தாங்காத சத்ரபதி சிவாஜி சிலை… 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது… காங்கிரஸ் விமர்சனம்…!
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையே பிரதமர் மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். கடந்த 3 நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் சூறாவளி காற்று வீசி வருவதால் நேற்று மதியம் ஒரு மணி அளவில் 35 உயரம் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து கை, கால்கள், தலை என ஒவ்வொரு பாகமும் கீழே விழுந்து நொறுங்கியது.
சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் தனது சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். அதில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கின்றது. பிரதமர் திறந்து வைத்த சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது.
ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த பதிவில் சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து இருக்கிறார்கள்.