national
சிறுமியின் உயிரைக் காக்க சல்மான்கான் செய்த மிகப்பெரிய செயல்… குவியும் வாழ்த்துக்கள்…!
சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரபல பாலிவுட் நடிகர் எலும்பு மஜ்ஜை தானம் செய்த சம்பவம் அரங்கே இருக்கின்றது.
பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் சினிமாத்துறை மட்டும் இல்லாமல் சமூக நற்பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார். தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அறக்கட்டளை மூலமாக உதவி செய்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டது. இதனால் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றுவதற்காக நடிகர் சல்மான்கான் அவரது கால்பந்து குழுவினரை நன்கொடை அளிக்க கேட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால் கடைசி நிமிடத்தில் கால்பந்து குழுவினர் பின்வாங்கி விட்டனர்.
இருப்பினும் சோர்ந்து போகாத சல்மான்கான் அவரது சகோதரர் ஹர்பாஸ் காணுடன் இணைந்து எலும்பு மஜ்ஜையை தானம் செய்திருக்கின்றார். அதன்படி முதன்முதலாக எலும்பு மஜ்ஜையை தானம் செய்த இந்திய சினிமா நடிகர் என்ற பெருமையை சல்மான் கான் பெறுகின்றார். அதே சமயம் அவரது தொண்டு அறக்கட்டளை பொதுமக்களுக்கு சுகாதாரம் , ஆதரவு, கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் மூலம் அறுவை சிகிச்சைகளுக்கு நிதி அளிப்பது போன்ற உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.