national
நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!
கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று கேரளா அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளிலிருந்து உடல்களும், உடல்களின் பாகங்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10,000 வழங்கப்படும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 300 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியுதவி 18 வயது முடிந்த இரண்டு பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.