Latest News
அவ்வளவு சீக்கிரம் நீதி கிடைக்காது… அதை பறிக்க வேண்டும்… பெண் மருத்துவரின் பெற்றோர் ஆவேசம்…!
நீதியை எளிதில் பெற முடியாது, அதை பறிக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் நேற்றைய போராட்டத்தின் போது பேசி இருக்கின்றார்கள்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. இதனால் நேற்று இரவு கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் தீபம் ஏற்றி நீதி வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவியின் தந்தை கூறும் போது “நாம் நீதியை எளிதாக பெற முடியாது. அதை பறிக்க வேண்டும். எல்லோருடைய உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுக்கின்றது” என்று தெரிவித்திருந்தார். மேலும் பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.