Latest News
ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் சிறுமிகள்… பதற வைக்கும் ரீல்ஸ் வீடியோ…!
சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் வீடியோவானது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள பள்ளி பாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். காளிமுத்து என்பவர் அவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.
சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்த இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார். சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர் வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லி இருக்கின்றார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இருப்பினும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.