national
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… இந்திய வானிலை எச்சரிக்கை…!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. இந்த மாதம் தொடக்கம் முதலே பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையின் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. அதன்படி வயநாடு, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மல்லபுரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த 8 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை கண்ணூர், காசக்கோடு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழை ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை நீடிக்கும். அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.