ராகுல் காந்தி கையால செஞ்சது… கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன்… பிடிவாதம் பிடிக்கும் தொழிலாளி…!

ராகுல் காந்தி கையால செஞ்சது… கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன்… பிடிவாதம் பிடிக்கும் தொழிலாளி…!

ராகுல் காந்தி கொடுத்த காலனி விலைமதிப்பற்றது. கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டேன் என்று தொழிலாளி கூறி இருக்கின்றார்.

உத்திரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்பி-ஆன ராகுல் காந்தி கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூரில் வழக்கு ஒன்றுக்காக கோர்ட்டுக்கு வந்திருக்கின்றார். அப்போது சுல்தான்பூர் கோர்ட்டுக்கு வெளியே 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ராம்சேட் என்ற தொழிலாளியை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அவரிடம் சென்று அவரின் அன்றாட வேலைகள் சம்பாத்தியம் என அனைத்தையும் அவர் கேட்டறிந்தார். மேலும் காலணிகளை சரி செய்வது தொடர்பாகவும் ராம்சேட்டிடம் ராகுல் காந்தி கற்றுக்கொண்டார். மறுநாள் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி கொடுத்தார் ராகுல் காந்தி. அத்துடன் இரண்டு புதிய செருப்புகளையும் பரிசாக அனுப்பி வைத்தார்.

ராகுல் காந்தி சரி செய்த செருப்பை பலரும் 1 லட்சத்து ரூபாய்க்கு பலரும் ராம்சேட்டிடம் விலைக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் அவர் கொடுக்க மறுத்து இருக்கின்றார். இது குறித்து அவர் கூறியதாவது “ராகுல் காந்தி எனது கடைக்கு வந்தது, கடவுளே என் கடையில் வந்து இறங்கியது போல.. நான் காலணிகளை எவ்வாறு சரி செய்கிறேன் என்பதை செய்து காட்டும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்.

பின்னர் அவர் ஒரு செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து அதை எப்படி தைப்பது என்று கற்றுக் கொண்டார். அவருக்கு ஒரு குளிர்பானம் கொடுத்தேன். அதை ஏற்றுக் கொண்டு என்னுடன் பகிர்ந்து கொண்டார். எனக்கு ஒரு புது செருப்பு தைக்கும் இயந்திரம் வாங்கி கொடுத்திருக்கின்றார்.

அவருக்கு நான் தைப்பதற்காக கற்றுக்கொடுத்த செருப்பை பலரும் ஒரு லட்சத்திற்கு மேல் கேட்கிறார்கள். அது விலைமதிப்பற்ற உடைமை. பணத்தின் அடிப்படையில் அவற்றை எடை போட முடியாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அதை விற்க மாட்டேன். நான் வாழும் வரை அவற்றை பிரேம் செய்து வைத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.