Connect with us

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

national

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றம் இன்றி 6.5 புள்ளிகளுடன் தொடர்கின்றது. இது பற்றிய அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார்.

அதன்படி ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும். அமெரிக்க பொருளாதார சூழல் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம், வீட்டு கடன் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி பழைய நிலையே நீடிக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றது. கடந்த ஆண்டு மே மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே ஆனா காலகட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.50 சதவிதமாக ரெப்போ வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் தற்போது எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டிருக்கின்றது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது ஒன்பதாவது முறையாகும்.

More in national

To Top