Latest News
ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளுக்கு… 2.91 கோடி ரூபாய் அபராதம்… ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!
எச்டிஎப்சி வங்கி-க்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கும் ஆர்பிஐ ஆக்சிஸ் வங்கி இருக்கு 1.92 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கின்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக எச்டிஎப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம் கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எச்டிஎப்சி வாங்கி இணங்காதது தெரியவந்துள்ளது.
2002 மார்ச் 31 வங்கியின் நிதிநிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வி அடைந்து விட்டதாக ஆர்பிஐ நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கி இருக்கின்றது. வாடிக்கையாளர் அடையாள குறியீட்டிற்கு பதிலாக பல வாடிக்கையாளர் அடையாள குறியீட்டை வழங்கி இருக்கின்றது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணயம் ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட பல காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இந்த நடவடிக்கையானது சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்து 1.92 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.