Latest News
எலி பிரசாத பாக்கெட்டுகளில் எலி குட்டிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் வழங்கப்படும் பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டிருந்த டிரேயில் எலிக்குட்டிகள் இருக்கும் வீடியோவானது தீயாக பரவி வருகின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டுகள் தயாரிக்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அந்த நெய்யில் கலப்படம் இருப்பது உறுதியானது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் பாக்கெட் வைக்கப்பட்டிருக்கும் ட்ரேவை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் அதில் குட்டி எலிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. திருப்பதி கோவிலில் லட்டு தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோ குறித்து சிவசேனா எம்எல்ஏ சதாசர்வன்கர் தெரிவித்திருந்ததாவது கோவில்களில் தினம் தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. லட்டு தயாரிக்கும் இடம் மிக சுத்தமாக இருக்க வேண்டும். வீடியோவில் காட்டப்படும் இடம் மிக அசுத்தமாக இருக்கின்றது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல, வெளியில் எங்கேயோ எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உடனே துணை கமிஷனர் விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசாதத்தை சுத்தமாக வழங்க கோவில் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.