Connect with us

எம்மா உன் ரேட் என்ன? எங்க அப்பா டிஎஸ்பி.. கணவருடன் வந்த பெண்ணிடம் ரகளை… வைரலாகும் வீடியோ…!

national

எம்மா உன் ரேட் என்ன? எங்க அப்பா டிஎஸ்பி.. கணவருடன் வந்த பெண்ணிடம் ரகளை… வைரலாகும் வீடியோ…!

மாலுக்கு தனது கணவருடன் வந்த பெண்ணிடம் போதை ஆசாமி ஒருவர் ரேட் என்ன என்று ரகளை ஈடுபட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவருடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஒரு நபர் ரேட் என்ன என தகாத முறையில் கேட்டு கைகலப்பு செய்துள்ளார். தனது கணவன் மற்றும் கணவரின் சகோதரன் உடன் கலேரியா மால் வெளியே வந்து அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.

அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர் உனது ரேட் என்ன என்று கேட்டிருக்கின்றார். மேலும் எங்க அப்பா, மாமா எல்லாம் டிஎஸ்பி என்று கூறி இருக்கின்றார். இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனது கணவனுடன் மாலுக்கு வந்த பெண்ணிற்கே இந்த கதியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டு தனக்கு நேர்ந்ததை விவரித்து இருக்கின்றார். இதுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் நீதியா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

More in national

To Top