Connect with us

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சை… 50 லட்சம் மதிப்புள்ள 4000 விளக்குகள் திருட்டு… அதிர்ச்சி சம்பவம்…!

national

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சை… 50 லட்சம் மதிப்புள்ள 4000 விளக்குகள் திருட்டு… அதிர்ச்சி சம்பவம்…!

உத்திரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்த அமைப்பினரால் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்ட கோயில் ராமர் கோவில். மத்திய பாஜக அரசால் 1800 கோடி செலவில் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் மீதமிருந்த நிலையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அவசர அவசரமாக கோவிலின் மூல விக்ரமான பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இது மக்களவைத் தேர்தலுக்காக பாஜக நடத்திய நாடகம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதை தொடர்ந்து ராமர் கோயில் வழிபாடு செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்து சென்று வருகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக அங்கு நடந்து வரும் சம்பவங்கள் கோவிலை பொலிவிழக்க செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த மாதங்களில் சிறிய மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாத கோவிலின் மேற்கூரை ஒழுகும் புகைப்படங்கள் வைரலானது. அதை தொடர்ந்து கோவிலின் மூத்த அர்ச்சகரும் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கோவிலின் பிரதான பாதையாக அமைக்கப்பட்ட ராமர் பாதை மழையால் சேதமடைந்த வீடியோக்களும் கடும் விமர்சனத்தை கொடுத்திருந்தது.

ஊழல் செய்யவே பாஜக ராமர் கோவிலை கட்டியதாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு இடையில் அடுத்த சர்ச்சையாக அயோத்தி கோயிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருக்கும் வண்ண விளக்குகள் 3800 விளக்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டு இருக்கின்றது.

அயோத்தி ராமர் கோயில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. 6400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விளக்குகளை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அது மட்டும் இல்லாமல் இந்த விளக்குகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த மார்ச் 19ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில் அதற்கு பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பல விளக்குகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் திருடப்பட்ட வண்ண விளக்குகளின் விலை மதிப்பு மட்டும் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன. இதை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in national

To Top