பிறந்தநாள் இறந்தநாளாகிய கொடுமை… நீட் தேர்வால் நடந்த சோகம்… கலங்க வைத்த தற்கொலை…!

பிறந்தநாள் இறந்தநாளாகிய கொடுமை… நீட் தேர்வால் நடந்த சோகம்… கலங்க வைத்த தற்கொலை…!

பிறந்தநாளை கொண்டாடிய சில மணி நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்காத காரணத்தால் 18 வயதான யதி அகர்வால் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

ஜெய்ப்பூரில் உள்ள வித்யாத்நகரில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த இவர் கடந்து வியாழக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கின்றார். பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்திலேயே அந்த மாணவி நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

மாணவியின் தற்கொலை கடிதத்தில் தனது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என உருக்கமாக எழுதி வைத்திருக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் யதி அகர்வால் போதிய மதிப்பெண் எடுக்காததால் அடுத்து வரும் நீட் தேர்வுக்கு தயாராக ஒரு பயிற்சி மையத்தில் அவரின் பெற்றோர்கள் சேர்த்திருந்ததாக கூறப்படுகின்றது.